டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 4 அரை சதங்களுடன் அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்றில் ஸ்காட்லாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் அவருடைய 4வது அரை சதம் இதுவாகும்.
இதன்மூலம், இந்த உலகக் கோப்பை போட்டியின் 5 ஆட்டங்களில் 264 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மேத்யூ ஹேடன், விராட் கோலிக்கு அடுத்ததாக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 4 அரை சதங்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையைப் பாபர் ஆஸம் படைத்துள்ளார். 2 ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், 5 ஆட்டங்களில் 240 ரன்கள் எடுத்துள்ளார்.