மன்னார்குடி, பிப்.22- கல்வி நிலையங்களில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல், மாண வர்களுக்கான கற்றல் சூழ லை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை, சேலம், தர்மபுரி, இராமநாதபுரம், திண்டு க்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள 110 அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த சன் டிவி 3 கோடியே 63 லட்சத்து 5100 ரூபாய் நிதி உதவி அளித்து ள்ளது. இதற்கான கசோலையை க்ரை தொண்டு அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பூஜா மர்வாஹா, தென்ம ண்டல இயக்குநர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்ட நிர்வா கிகளிடம் சன் டி.வி சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழ ங்கினார். இந்த நிதி உத வியின் மூலம் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் உள்கட்ட மைப்பு வசதிகள் மேம்ப டுத்தப்படும் என்று க்ரை நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏழை - எளியோர் நலன், சுகாதார மேம்பாடு, அடி ப்படைக் கட்டமைப்பு உள்ளி ட்ட சமூக மேம்பாட்டுப் பணிக ளுக்காக சன் டிவி மற்றும் சன் பவுண்டேஷன் சார்பில் இதுவரை சுமார் ரூ.104 கோடி நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது