tamilnadu

img

திருவிக கல்லூரி மாணவர் சங்க மாநாடு

திருவாரூர்: இந்திய மாணவர் சங்கத்தின் திருவாரூர் திருவிக கல்லூரியின் 30வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டை கல்லூரி சங்க தலைவர் அஜித் தலைமை தாங்கினார். வாழ்த்துரையாக, மாவட்டக்குழு உறுப்பினர் சத்யசீலன், நகர தலைவர் சுர்ஜித், முன்னாள் கிளை தலைவர், சிவபாலன் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் இரா.ஹரிசுர்ஜித் பேசினார், புதிய நிர்வாகிகளாக கல்லூரி சங்கத் தலைவராக அபிமன்யு, கிளை செயலாளராக மணி மற்றும் 30 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. 700க்கும் மேற்பட்ட மானவ மாணவிகள் கலந்து கொண்டனர்.