திருவாரூர், ஏப்.1-
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் ஆழித்தேரோட்ட விழா திங்கட்கிழமை நடைபெற்றது. காலை 7 மணியளவில் ஆட்சியர் த.ஆனந்த், தேரோட்டத்தை வடம் பிடித்துதுவங்கி வைத்தார். விழாவில் மாவட்டநீதிபதி கலைமதி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் எஸ்.எஸ்.பாலசுப்ரமணியன், கோவில் செயல் அலுவலர் கோ.கவிதா, கோவில்பரம்பரை அறங்காவலர் ராம்தியாகராஜன், தருமபுரம், திருப்புகழுர், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் மடாதிபதிகள் கலந்து கொண்டனர்.விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினைவடம்பிடித்து இழுத்தனர். காலை 5 மணியளவில் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. விழாவினையொட்டி மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.