குடவாசல், ஜூன் 30- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் நடை பெறும் மணல் கொள்ளை யை தடுத்து நிறுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் குழு சார்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நீடா மங்கலம் வட்டாட்சியர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் சோம.ராஜ மாணிக்கம், மாவட்ட செய ற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெருமாள், பி.கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் நீடாமங்க லம் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உறுதியளித்ததை ஏற்று தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில், இனி மணல் கொள்ளையைத் தடுக்கும் விதமாக வருவா ய்த்துறையினர், காவல் துறையினர் இணைந்து, தினம் ஒரு கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவி யாளருடன் காவலர் ஒருவர் கொண்ட குழு அமைத்து சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவர் என்றும் மணல் கொள்ளை நடைபெறுவதாக தகவல் வந்தால் உடனே உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்ப டையில் போராட்டம் தற்காலி கமாக ஒத்தி வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது கட்சியின் நகர செயலா ளர் சி.டி.ஜோசப், ஒன்றிய குழு உறுப்பினர் டி.ஜான்கெ ன்னடி மற்றும்வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் டி.பி கிஷோர்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.