திருவாரூர், ஜூலை 20- ‘நமது நெல்லை காப்போம்’ அமைப்பின் சார்பில் 14-வது தேசிய நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா திருவாரூரில் தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் பி.துரைசிங்கம் தலைமை வகித்தார். தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் விழாவினை துவக்கி வைத்து விதை நெல் வழங்கி உரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் பாரம்பரிய உணவு தயாரிப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரது உருவப் படங்கள திறந்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.