மன்னார்குடி, நவ.5- திருவாரூர் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தை.புகழேந்தி தலைமை வகித்தார். மாநாட்டில் 26 பள்ளி மற்றும் அறிவியல் மன்றங்களிலிருந்தும் 121 ஆய்வுக் கட்டு ரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. முத்துப் பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியைச் சேர்ந்த த.ரகுராமன், அ.நவீன் சமர்ப்பித்த முத்துப்பேட்டை சதுப்பு நிலக் காடுகள் அழிவும், அதனை மீட்டெடுத்தல் குறித்த ஒர் ஆய்வும், மன்னார்குடி எஸ்.பி.ஏ மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஜி.அபர்ணா, எம்.கார்த்திகா சமர்ப்பித்த வாழை பழத் தோல் உரம் பற்றிய ஒர் ஆய்வும், செருவமணி அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மு.அருண் குமார், ஐ.ஜெய்கணேஷ் சமர்ப்பித்த கட்டா மணக்குச் செடியும் அதனால் வளம் இழந்த செருவாமணி கிராமத்தின் குளங்களும் ஓர் ஆய்வும், மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஏ.எஸ்.செல்வசுமன், ஆர்.எம்.மாதவன் சமர்ப்பித்த ஆரோக்கி யத்தில் முட்டையின் பங்கு என்ற ஆய்வும், திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல் நிலைப்பள்ளி எஸ்.கீர்த்தனா, ஏ.அதிதி சமர்ப்பித்த சுற்றுச்சூழல் மேலாண்மை என்ற ஆய்வும், கல்லடிக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எஸ்.கார்த்திக் ராஜா, த.பாலாஜி சமர்ப்பித்த காம்புவ னோடை கிராமத்தில் மீன் கழிவு மறுசுழற்சி குறித்த ஓர் ஆய்வும், மேலமரவாக்காடு தேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிச் சேர்ந்த எஸ்.அனுவித்யா, எஸ்.சஷ்டிகா கிரா மங்களில் வீடுகளுக்கான அழுத்த மின்னாற்றல் மூலம் மின் உற்பத்தி என்ற ஆய்வும் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வாகியுள்ளன. இந்த ஆய்வு குழுக்கள் நவம்பர் 15-ஆம் தேதி வேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்பார்கள். ஆய்வு மதிப் பீட்டாளர்களாக பேராசிரியர்கள் டாக்டர் விஜயன் பாபு, ராம்பிரகாஷ், ரிஷி, விநாய கன், டாக்டர் எம்.வி பாலசுப்பிரமணியன், பி.தண்டபாணி ஆகியோர் செயல்பட்டார் கள். மாநில துணைத் தலைவர் டாக்டர் வெ. சுகுமாறன், மாநில செயலாளர் எம்.எஸ்.ஸ்டீ பன்நாதன், மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வா.சுரேஷ், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பா ளர் நா.ராமமூர்த்தி, மாவட்ட தலைவர் தை.புகழேந்தி ஆகியோர் பரிசு, சான்றிதழை வழங்கினார்கள்.