districts

img

தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு

6 கட்டுரைகள் தேர்வு

நாகப்பட்டினம், நவ.13- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் தகவல் பரிமாற்றக் குழுமம், தேசிய அறிவியல் தொழில் நுட்பத் துறை ஆகியவற்றின் சார்பில், நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இளம் விஞ்ஞானி களைத் தேர்வு செய்யும் மாநில அளவிலான 27-ஆவது தேசியக் குழந்தைகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுத் துவக்க விவக்க விழாவிற்குத் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் கவிஞர் எஸ்.எம்.ஆரிபு தலைமை வகித்தார். மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நா.எழிலரசன் வர வேற்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலா ளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் அறிமுகவுரையாற்றினார். நாகப்பட்டினம் வருவாய்க் கோட்ட அலுவலர் இரா.பழனிக்குமார் துவக்கவுரையாற்றினார். 

தொடர்ந்து, “தூய்மையான, பசுமையான, வளமான தேசத்திற் கான அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புதுமையான கண்டு பிடிப்புகள்” என்னும் பொருளில் நாகை மாவட்ட இளம் விஞ்ஞானி கள் (மாணவர்கள்) வழங்கும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கும் கருத்த ரங்கு நடைபெற்றது. இதற்குப் பேராசிரியர் கே.சம்பந்தன் தலைமை வகித்தார். முனைவர்கள் கே.முகமது இஸ்மாயில், ஜி.செல்வரா ஜன், ஐ.ஜன்னத்துல் பிர்தெளஸ், பேராசிரியர் ஆர்.வினோதினி ஆகி யோர் நடுவர்களாகப் பொறுப்பேற்று மாணவர்கள் வழங்கிய 108 ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பீடு செய்து, தேசிய மாநாட்டிற்காகச் சிறந்த 6 கட்டுரைகளைத்  தேர்வு செய்தனர். மாநாட்டு நிறைவு விழாவிற்குத் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் முனைவர் வி.சுகுமாறன் தலைமை வகித்தார்.  நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.குணசேகரன், நாகப்பட்டினம் வட்டாட்சியர் ஏ.பிரான்சிஸ், நாகை உமா நிறுவனங்க ளின் விஜயலெட்சுமி ராஜராஜன் ஆகியோர், மாநாட்டில் பங்கேற்ற இளம் விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கிப் பாராட்டிப் பேசினர். அறிவியல் மாநாட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். பிரேமலதா நன்றி கூறினார்.