மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பேரவை கூட்டம் புதனன்று திருத்துறைப்பூண்டியில் நகரச் செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமையில் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். கட்சி பிளீனம், முழு நேர ஊழியர்கள் செயல்பாடு குறித்து மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார். உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பேசினார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.