திருவாரூர், பிப்.5- மதுரை மாவட்டத்தில் சிஐடியு சங்கத்தை சார்ந்த ஆட்டோக்களுக்கு சோதனை என்ற பெயரில் 2500 முதல் 4000 ரூபாய் வரை 500 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் அபராதம் விதிக்கப்பட்ட சிஐடியு சங்கத்தை சார்ந்த அரிச்சந்திரன் என்பவர் அபராதம் கட்ட முடியாமல் மன வேதனையில் மின்கம்ப கம்பியை பிடித்து தற்கொலை செய்தார். அவரது தற்கொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடந்த போராட்டத்தில் தொழிற் சங்க தலைவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனை கண்டித்து திங்கட் கிழமை திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆட்டோ ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே. என்.அனிபா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், மாவட்டத் தலைவர் இரா. மாலதி, பொருளாளர் எம்.பி.கே. பாண்டியன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஏ.நபி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.