tamilnadu

img

விவசாயிகள் பெயரில் கடன் மோசடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை கோரி போராட்டம்

தஞ்சாவூர், மே 30-திருஆரூரான் சர்க்கரை ஆலைவிவசாயிகள் பெயரில் கடன் வாங்கிரூ 300 கோடி மோசடி செய்த ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்புவிவசாயிகள் சங்க, திருஆரூரான் சர்க்கரை ஆலை, ஆலை மட்டக்கமிட்டி தஞ்சாவூர்- திருவாரூர் மாவட் டத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆலை மட்டத் தலைவர் பி.எம்.காதர் உசேன் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.தம்புசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச்செயலாளர் சாமி.நடராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், சர்க்கரை ஆலை செயலாளர் கே.முருகன், தலைவர் டி.காசிநாதன், பாரி சர்க்கரை செயலாளர் எஸ்.பீமராஜ், த.வி.ச மாவட்டதுணைச் செயலாளர்கள் எஸ்.கோவிந்தராஜ், வி.சிதம்பரம், என்.கணேசன், கே.முனியாண்டி, த.வி.சமாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஞானமாணிக்கம், த.வி.ச மாவட்டக்குழு ஆர்.கஸ்தூரிபாய், த.வி.சஒன்றியத் தலைவர் கே.சதாசிவம், ஆலை மட்ட நிர்வாகி வி.முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “வங்கி அதிகாரிகள் துணையுடன், விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த கரும்பு ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெயரில் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைமுழுவதையும், ஆலை நிர்வாகத்திடம் ஜப்தி செய்து வங்கிகளுக்கு செலுத்தி, விவசாயிகளை கடன் வலையில் இருந்து அரசு பாதுகாக்க வேண்டும். மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீதும்சர்க்கரை ஆலை இயக்குனர் மற்றும்ஆலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.