அரியலூர், மார்ச் 10- தேசிய ஊரக வேலை திட்ட மோச டியில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இத் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து நூறு நாள் வேலையினை இரு நூறு நாளாக மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அரியலூர் அண்ணா சிலை முன்பு மனுக் கொடுக்கும் போராட்டம் தமிழ் நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோ வன் தலைமையில் நடைபெற்றது. வி.சுப்பிரமணியன், கே.முருகன், எ.தங்க ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எ.சௌரிராஜன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயளாளர் கே.மகாராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் பி.துரைசாமி, பொருளாளர் ஆர்.சிற்றம்பவம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.பத்மாவதி, மாவட்ட குழு உறுப்பினர் உஸ்.மலர் கொடி, மார்க்சிஸ்ட்கட்சி ஒன்றிய செயலாளர்கள் வி.பரமசிவம், எ.கந்த சாமி, பி.அழகுதுரை, ஜெ.ராதா கிருஷ் ணன், விவசாயிகள் சங்கம் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.சங்குபாலன், து.காசிநாதன், ஆர்.சங்கர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.