tamilnadu

மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

மன்னார்குடி, மே 24- மன்னார்குடி மீன் அங்காடி மற்றும் சாலையோரம் விற்பனை செய்யப்படும் மீன்கள் காலாவதியானவையா அல்லது பார்மலின் வேதிப்பொருள் ஊட்டப்பட்ட வையா என்றறியும் ஆய்வு மன்னார்குடி யில் நடத்தப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நிய மன அலுவலர் மரு.பிகே.கைலாஸ் குமார், தலைமையில் மீன்வளத்துறை ஆய்வாளர் டி.சந்திரமணி, உணவு பாது காப்பு அலுவலர் க. மணவழகன் ஆகி யோர் கள ஆய்வில் பங்கேற்றனர். இதில் சுமார் ஏழு கிலோ எடையுள்ள காலாவதி யான மீன்கள் கண்டறியப்பட்டு அப்புறப் படுத்தப்பட்டன.