tamilnadu

அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகாரிகள் ஆய்வு

தஞ்சாவூர், ஜன.11- தஞ்சாவூர் மாவட்டம் வேங்கராயன்குடிக்காடு பகுதியில் விவசாயிகள் சாகு படி செய்துள்ள சோளப்ப யிரில் அமெரிக்கன் படை ப்புழு தாக்குதல் தென்பட்டது. இதுகுறித்து தீக்கதிர் நாளித ழில், சனிக்கிழமை விரிவான செய்தி வெளியானது.  இதன் எதிரொலியாக வே ளாண் துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு, பாதிக்கப்பட்ட சோள ப்பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆலோ சனை வழங்கியதோடு, பூச்சி க்கொல்லி மருந்துகளை தெளித்தனர்.  தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை வேளாண் கோட்டத்திற்குட்பட்ட வேங்க ராயன்குடிக்காடு, அதி னாம்பட்டு, வடக்குப்பட்டு, வல்லுண்டாம்பட்டு பகுதி யில் கடந்த மார்கழிப் பட்டத்தில் 100 ஏக்கரில் சோளம் பயிரிடப்பட்டு, நன்கு வளர்ந்து வரும் நிலை யில் அமெரிக்கன் படைப்புழு  தாக்குதல் காரணமாக பயிர்கள் காய்ந்து கருகின. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.  இந்நிலையில் வேளா ண்துறை உதவி இயக்குநர் அய்யம்பெருமாள், உதவி இயக்குநர்கள் பரமசிவம், கோமதி தங்கம், வேளாண் உதவி அலுவலர் கணேசன் ஆகியோர் அப்பகுதியில் முகாமிட்டு, பாதிக்கப்பட்ட சோளப்பயிர்களை பார்வை யிட்டு, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய தோடு, பூச்சிக்கொல்லி மரு ந்துகளை பரிந்துரை செய்துள்ளனர்.  இதுகுறித்து வேளா ண்துறை உதவி இயக்குநர் அய்யம்பெருமாள் கூறுகை யில், “சோளப் பயிரில் அமெ ரிக்கன் படைப்புழு தாக்கு தலைக் கட்டுப்படுத்த, ஒரு ங்கிணைந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசா யிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சோளம் பயிரிடுவதற்கு முன்பாக ஆழ் உளவு மற்றும் கடைசி உழவில் வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100  கிலோ கலந்து விதைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்து 10 வரிசைக்கு ஒரு  வரிசை இடைவெளி விட வேண்டும். பயிர்களில் படை ப்புழுக்கள் தாக்குதல் தென்ப ட்டால், உடனடியாக வேளா ண்மை துறையினரை அணுகி  உரிய ஆலோசனைகளை பெறலாம்” என்றார்.