tamilnadu

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஆக.24, 25 மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கம்

திருவாரூர், ஆக.22- அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவ ட்டத்தில் ஆக.24, 25 ஆகிய தேதிகளில் நகரா ட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில்  மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது. கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகள் சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசு ரங்கள் வழங்கப்பட உள்ளது. ஆக.26 அன்று  கிளைகள் தோறும் தனிமனித இடைவெளி யைக் கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  புதிய கல்விக்கொள்கை 2020 திரும்ப பெற  வேண்டும். விவசாயத்தை கார்ப்ரேட்டுக ளிடம் ஒப்படைக்கும் அவசர சட்டங்களை திரும்ப பெற வேண்டும். கூட்டுறவு நிறுவ னங்களை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை கைவிட வேண்டும். சுற்று ச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை அழிக்கும்  நடவடிக்கையை கைவிட வேண்டும். தமி ழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய  வேண்டும். மக்களது வாழ்வாதாரத்திற்கு நிவாரண உதவியை உயர்த்தி வழங்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மற்றும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை தடு த்து நிறுத்த வேண்டும் என்ற முழக்கங்களை வலியுறுத்தி முழக்கங்களை முன்வைத்து மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெற உள்ள தாக சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தெரிவித்துள்ளார்.