சேலம், ஆக.10- சுதந்திர தினத்தையொட்டி, வரும் 15ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில், ஆண்டு தோறும் குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில், சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம சபா கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், திடக் கழிவு மேலாண்மை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராம வளர்ச்சித் திட்டம் குறித்தும், குடிநீர் சிக்கனம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவ டிக்கைகள், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் ஆலோ சனை நடத்தப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.