தஞ்சாவூர், ஏப்.6 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டக் குழு கூட்டம் செவ் வாய்க்கிழமை தஞ்சாவூர் கணபதி நகர் சங்க அலுவ லகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.வாசு தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் கே.பக்கிரி சாமி, மாநிலக்குழு உறுப்பி னர் சி.நாகராஜன், மாவட்டப் பொருளாளர் கே.அபி மன்னன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், “நூறு நாள் வேலையை அனைத்து ஊராட் சிகளிலும் உடனடியாக துவக்க வேண்டும். சட்டத் திற்கும், மனிதாபிமானத் திற்கும் புறம்பாக காலை 7 மணிக்கே வேலைக்கு வர வேண்டும் என வலியுறுத் தும், சட்டவிரோத போக்கை கைவிட வேண்டும். விலை வாசி உயர்வுக்கு ஏற்ப கூலியை ரூ. 600 ஆக உயர்த்தி தர வேண்டும். பேரூராட்சிகளில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி தர வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில், வேலை அட்டை கேட்பவரி டம், வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டினால்தான் வேலை அட்டை வழங்கப்படும் என்பதை கைவிட வேண் டும்” என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஏப்.19 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) மாவட்டம் முழுவ தும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பும் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்துவது என தீர்மானிக் கப்பட்டது.