tamilnadu

img

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது

திருத்துறைப்பூண்டி, ஜன.4- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட ஊராட்சி, 16 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 32 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்காக மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் மாவட்ட ஊராட்சிக்கு போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் சிபிஐ வேட்பாளர் தமயந்தி மற்றும் சுஜாதா வெற்றி பெற்றனர்.  ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சிபிஎம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கு.வேதரத்தினம், சிபிஐ சார்பில் அ. பாஸ்கர்,  இரா.ஞானமோகன், ம. பத்மா, வெ. இந்திரா, கா. சித்ரகலா, கு.பிரேமா, மு.மாரியம்மாள், திமுக சார்பில் மு.ராமகிருஷ்ணன், இரா. பக்கிரியம்மாள், ரா.சரஸ்வதி, அ. ஆரோக்கியமேரி மற்றும் அதிமுக சார்பில் சி.முருகேசன், அ.ம.மு.க சார்பில் சா.கோபாலராமன், சுயேச்சை வேட்பாளர்கள் மன்மதன் சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஊராட்சி மன்ற தலைவராக சிபிஎம் சார்பில் எஸ்.முத்துக்குமாரசாமி, கௌசல்யா முருகானந்தம், பத்மனி ஜீவானந்தம், ராஜேஸ்வரி ரங்கசாமி, சிபிஐ சார்பில் சுசிலா, சுபிதா, சுப்பிரமணியன், கலாராணி, மேனகா, பழனி, திமுக சார்பில் வீரசேகரன், இளமதி, மாலினி, ஜெயச்சந்திரன், வசந்தன், ஜானகிராமன், கருணாநிதி, மாரிமுத்து, தேன்மொழி, சின்னப்பா, தனலட்சுமி, அதிமுக சார்பில் தமிழ்மணி, மஞ்சுளா, வளர்மதி, சுமத்ரா, ரமா, சின்னையன், சுயேச்சை வேட்பாளராக முருகானந்தம், உலகநாதன், கோகிலம், ராஜ், கலைச்செல்வி ஆகியோர் வெற்றி பெற்றனர்.  இதில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 2 மாவட்ட ஊராட்சி, 12 ஒன்றிய கவுன்சிலர், 21 ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பெரும்பான்மையான இடத்தை கைப்பற்றியது.