திருவாரூர் ஆக.4- நாடு முழுவதும் செய்தி ஊடகத்துறையினர் மீது நட த்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் படு கொலை செய்யப்படுவதை கண்டித்தும், பாஜகவின் பாசிச ஆட்சியைக் கண்டி த்தும் திருவாரூர் புதிய ரயில் நிலைய சந்திப்பு அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கி ணைப்பாளர் தங்க.சண்முக சுந்தரம் தலைமையேற்றார். பல்வேறு அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்டனர். மத்திய அரசின் பாசிச போக்கைக் கண்டித்தும், அச்சுறுத்தி பணிய வைக்க முயற்சிக்கும் அரசியல் நடவடிக்கைகளைக் கண்டி த்தும் முழக்கங்கள் எழுப்ப ப்பட்டன.