tamilnadu

img

குடவாசலில் எம்.செல்வராசுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் வாக்குச் சேகரிப்பு

குடவாசல், ஏப்.13- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உரையாற்றினார். வெள்ளிக்கிழமை மாலை குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டு மோடியின் ஆட்சி அவலங்களை மக்கள் பட்ட அவஸ்தைகளை சுட்டிக்காட்டி, தமிழகத்தில்எடப்பாடி தலைமையில் நடைபெறும் அதிமுக எடுபிடி அரசை விமர்சித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களையும், துயரங்களையும், தொழிலாளர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை பேசினார்.முன்னதாக மகேந்திரனுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.லட்சுமி, திமுக நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் வரவேற்புஅளிக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கெரக்கோரியா, சிபிஐ ஒன்றியச் செயலாளர் எ.சுப்ரவேல், மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச் செயலாளர் ஆதித்யாபாலு, காங்கிரஸ் வட்டாரத் தலைவர்முனிய்யா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.