tamilnadu

குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை,மே 13-திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே குடிநீர் வழங்கக் கோரி, பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.செய்யாறை அடுத்த தண்டரை மேட்டுக் காலனி பகுதிக்கு ஆழ்துளை கிணறுகளிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கோடை வறட்சியால், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விட்டதால், முறையாக குடிநீர் வழங்கமுடியவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அலுவலர்களிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் கோபமடைந்த கிராம மக்கள் செய்யாறு-ஆரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். செய்யாறு வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு நாட்களில் குடிநீர் தட்டுபாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததின் பேரில், பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.