திருவண்ணாமலை, ஜூலை 17- ஊராக வேலை உறுதி திட்டத் தில் முறைகேடு செய்வதைக் கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், சோ.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது தென்அர சம்பட்டு கிராமம். இங்கு பணித் தளப் பொறுப்பாளராக 10 ஆண்டு களுக்கும் மேலாக இருந்து வரும் சுதா என்பவர் ஊரக வேலைத் திட்டத்தில் வேலை வழங்குவதற் கான அடையாள அட்டை வழங்கு வதில் முறைகேடு செய்வதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, சுதாவை மாற்றக் கோரி தென்அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் தலைமையில் 100க்கும் மேற் பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவலறிந்த சோ.கிழ்நாச்சிப் பட்டு ஊராட்சித் தலைவர் அர்ஜூ னன் மற்றும் கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர் வந்து மறிய லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஓரிரு தினங் களில் பணி தளப் பொறுப்பாளர் மாற்றுவதாக உறுதி அளித்தனர்.