மதுராந்தகம், மார்ச் 19- செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூர் கிரா மத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வா கத்தின் சார்பில் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக குடிதண்ணீர் சரியான முறையில் வழங்காததால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவந்துள்ளனர். இதனால் ஆத்தி ரமடைந்த கிராம மக்கள் ஐம்பதுக்கும் மேற் பட்ட பெண்கள் உள்ளிட்டவர்கள் நாள் தோறும் குடிதண்ணீர் வழங்கிட வலியுறுத்தி செங்கல்பட்டு தச்சூர் சாலையில் அரசு பேருந்தைச் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த செய்யூர் காவல் ஆய்வாளர் சின்ன துரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் தொடர்ந்து குடிதண்ணீர் வழங்குவதற்கு நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.