districts

img

குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை, ஜூலை 4- திருவண்ணாமலை அண்ணாமலையார்  கோவில் பின்புறம் பேகோ புரம் 4-வது தெரு அமைந் துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு குடிநீர் கிடைக்காமல் தவித்த  பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஞாயிறன்று காலை திடீரென சாலை மறி யல் போராட்டம் நடத்தினர். தெருவில் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுப்பு களை வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காலி குடங்களுடன்  குடிநீர் வழங்கக் கோரி  கோஷம் எழுப்பி ஆர்ப்பாட் டம் செய்தனர். இதுபற்றி தக வல் கிடைத்ததும் திரு வண்ணாமலை  நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடி நீர் சப்ளை செய்தால்தான் போராட்டத்தை கைவிடு வோம் என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக சம்  பந்தப்பட்ட அதிகாரிகளு டன் பேசி விரைவில் குடிநீர்  சப்ளை கிடைக்கதேவை யான நடவடிக்கைகள் எடுக் கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதனை  ஏற்று அனைவரும் கலைந்து  சென்றனர்.