திருவண்ணாமலை, ஏப். 24-திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் ஜமுனாமரத்தூர் வட்டம், அத்திப்பட்டு (இருப்பு) காவலூர் கிராமத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 2019 -2020 ஆம் கல்வியாண்டில் இப்பள்ளியில் 300 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இப்பள்ளியில் பழங்குடியின மாணவர்களின் தகுதித்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்வி பயில அனுமதிக்கப்ப டுவர். இப்பள்ளியில் அனுமதிக்கப்படும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் தரமான ஆங்கில வழிக்கல்வி, உணவு, உறைவிடம், சீருடை, கல்வி உபகரணங்கள் மற்றும் விடுதியில் தங்கி பயில்வதற்கு உரிய வசதிகளை அரசு வழங்கியுள்ளது.எனவே, இப்பள்ளியில் பழங்குடியின மாணவர்களை 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சாதிச்சான்று, பெற்றோரின் ஆதார், இருப்பிடச் சான்று மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) 9384047464, தலைமையாசிரியர் (பொ) 9047713371, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, அத்திப்பட்டு (இருப்பு), காவலூர், திருவண்ணாமலை என்ற முகவரிகளில் நேரில் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளும் படி மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.