tamilnadu

img

அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறை

திருவண்ணாமலை, ஏப். 20- தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, காவல்துறை மறுத்து வருவதாக ஊழியர்கள் குற்றச் சாட்டு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மண்டலம் வந்தவாசி பணிமனை 1 பேருந்து என் தநா 25 எண். 0268 தடம் எண் 104 பேருந்து வெள்ளியன்று (ஏப். 19) சென்னையில் மாலை 6.40 மணிக்கு கிளம்பி போளூருக்கு வந்துள்ளது. இரவு 10.45 மணிக்கு சேத்பட் அடுத்த கிழக்கு மேடு கூட்டு சாலை அருகே பேருந்து வந்தபோது திடீரென ஒரு கூட்டத்தினர் மிக வேகமாக சாலையினை கடக்க முயன்றுள்ளனர்.பாதசாரிகளை காப் பாற்ற, பேருந்தின் ஒட்டுனர் பிரேக் அடித்து நிறுத்தியுள்ளார். அப்போது சிலரருக்கு சிராய்ப்பு ஏற்பட்டுள் ளது. அங்கு இருந்தவர்கள், ஒட்டுனர் சீனுவாசன், நடத்துனர் பன்னீர் செல்வம் ஆகியோரை மூர்க்கதனமாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்தவர்களுக்கு சேத்பட் மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆனால், போக்குவரத்து கழக அதிகாரிகளோ, காவல்துறையினரோ மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட ஊழியர்களை பார்க்கவில்லை.மேலும் ஊழியர்கள் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதை காவல்துறையினர் வாங்க மறுக்கின்றனர் என்று, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வி.ஆர். ஏழுமலை, விஜயகுமார், கே.நாகராஜன், எஸ்.முரளி உள்ளிட்ட ஊழியர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல் துறையினரைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.