tamilnadu

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் குறித்த தகவல் அளிக்க வேண்டும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

திருவண்ணாமலை, மார்ச் 24- கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை, தடுக்கும் பொருட்டு திரு வண்ணாமலை நகரில்  வசித்து வரும் வெளிநாட்ட வர்கள் தங்களது வருகை மற்றும் இருப்பிடம் பற்றிய தகவல்களை திருவண்ணா மலை வேங்கிக்கால் கிராமம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவல கத்தில் தெரியபடுத்துமாறு காவல்துறை கண்காணிப் பாளர் சிபிசக்கரவர்த்தி தெரி வித்துள்ளார். திருவண்ணாமலை நகருக்கு  ஆண்டுதோறும், ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள், ஆசிரமம், விடுதி மற்றும் தனியாக வீடுகளை வாட கைக்கு எடுத்த தங்கி செல்வர். தற்போது, கோடை வெப்பம் சுட்டெரிக்க தொடங்கியதால், கடந்த பிப்ரவரி மாதமே அவர்கள் சொந்த நாட்டிக்கு செல்ல தொடங்கினர். இந்நிலையில், கொ ரோனா வைரஸ் தாக்கத்தால், காவல்துறையினர் அங்குள்ள வெளிநாட்டினரை கண்டறிந்து, அவரவர் நாடுகளுக்கு திரும்ப கேட்டு கொண்டனர். அதன்படி, கடந்த, மார்ச் 18  ஆம் தேதி  வரை, சுற்றுலாவில் வந்த, வெளிநாட்டினர் அனைவரும் வெளியேறி விட்டனர்.தற்போது, 100க்கும் குறைவானவர்களே இங்குள்ளனர். அவர்கள், இங்கேயே தங்க அனுமதி பெற்றவர்கள்.  இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்ததில், 38 பேரை மாவட்ட நிர்வாகம் தொடர் கண் காணிப்பில் வைத்துள்ளது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. ஆனால், காய்ச்சல் அறிகுறி இருந் தது. விமான நிலைய ஆய்வில், கெரோனா பாதிப்பு இல்லை என, சான்று பெற்றிருந்தனர். அவர்களி டம் பெற்ற விபரங்கள் அடிப்படையில், அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  மேலும் வேறு யாரேனும் வெளிநாட்டு பயணிகள் திரு வண்ணாமலைக்கு வந்தி ருந்தாலும், இங்கு தங்கியி ருந்தாலும் உடனடியாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் பதிவு அலுவலகத்தில் தகவல் அளிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவி சக்கரவர்த்தி தெரிவித்துள் ளார்.