tamilnadu

img

போலி சாதிச்சான்று கொடுத்த வேட்பாளர்: நடவடிக்கை எடுக்க தலித் மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, ஜன. 4- திருவண்ணாமலை அடுத்த மதுராம்பட்டு  கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் பதவிக்கு போட்டியிட்ட ஒரு வேட்பா ளர் இந்து ஆதிதிராவிடர் (எஸ்சி) என போலி யான சாதி சான்றிதழ் சமர்ப்பித்து வெற்றி பெற்றுள்ளதாக, மதுராம்பட்டு பகுதி தலித் மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த கிராம மக்கள் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில், சனிக்கிழமை யன்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மது ராம்பட்டு கிராமத்தில், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த (கிறிஸ்டியன்) வில்சன் என்பவர், தாழ்த்தப்பட்டவர் என, போலியாக சான்று அளித்து, ஊராட்சி மன்றத் தலைவர் தேர்த லில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் மனு தாக்கல் செய்த போதே இது  சம்பந்தமாக, மதுராம்பட்டு கிராம பொது மக்கள் தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரி வித்துள்ளனர். ஆனாலும், அந்த வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தவறாக சாதிச்சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற வில்சன் வெற்றி செல்லாது என்று அறி வித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.