tamilnadu

பொதுமுடக்கத்தால் தவித்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

திருவண்ணாமலை, ஜுன் 9- திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள தொழி லாளர்களும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பலரும் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா தொற்று  பரவாமல் தடுக்க அறி விக்கப்பட்ட பொதுமுடக் கத்தால் லம்பாடி இனத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 747 பேர், சொந்த ஊர் செல்ல முடியா மல் தவித்து வந்தனர். இவர்  களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என  தமிழ்நாடு பஞ்சாராலம்பாடி கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.ரவி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்துடுத்து, செய்யாறு பகுதியிலிருந்து 177 பேர் சொந்த ஊர் திரும்ப  நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைவரும் 32 வாகனங்க ளில் அனுப்பி வைக்கப்பட்ட னர்.