திருச்சிராப்பள்ளி, மே 20- கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி தொடர்பாக தடை உத்தரவு அமலில் உள்ளதால் தமிழக முதல்வர், வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்தந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படு வார்கள் என ஆணையிட்டுள்ளார். அதன்படி, அரசு வழிகாட்டு தலின்படி 1500கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், பெரம்ப லூர் மாவட்டத்தில் 416 தொழிலாளர்கள், திருச்சி மாவட்டத்தில் 1009 தொழிலாளர்கள் ஆகிய இரண்டு மாவட்டங்க ளில் தங்கி பணிபுரிந்த மொத்தம் 1425 தொழிலாளர்கள் திருச்சி ரயில்வே ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து சமூக இடை வெளியை கடைபிடித்து, மதிய உணவு வழங்கி சிறப்பு ரயில் மூலம் பயணிகள் புதனன்று அனுப்பி வைக்கப் பட்டனர். பதிவு செய்துள்ள மீதமுள்ள நபர்களுக்கு சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்று பதிவு செய்துள்ளவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.