திருவண்ணாமலை, பிப். 24- திருவண்ணாமலை நகராட்சியில் மக்களின் தேவைகளை நிறைவேற் றக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை, திருக்கோவி லூர் சாலையில் உள்ள நகராட்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, நகரச் செயலாளர் எம். ரவி தலைமை தாங்கினார், மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எஸ்.ராமதாஸ், மாவட்டக்குழு உறுப் பினர்கள் எம். சந்திரசேகர், எஸ்.பல ராமன், நகரக் குழு உறுப்பினர்கள் என். வெங்கடேசன், கே. நீதிமாணிக்கம், ஏ. தங்கமணி, இலியாஸ், சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகராட்சிக்குட்பட்ட 39 வார்டு களில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்தாமல் 21 வார்டுகளில் மட்டும் அமல்படுத்திவிட்டு, மீத முள்ள 18 வார்டுகளில் அமல் படுத்தப் படாத நிலையில், அனைத்து வார்டு களிலும் வரி வசூல் செய்வதை நக ராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும், அனைத்து வார்டுகளிலும் சின் டெக்ஸ் டேங்க் அமைத்து சுத்திக ரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், அனைத்து வார்டுகளிலும் குப்பை களை அகற்ற வேண்டும், நக ராட்சிக்கு சொந்தமான இடத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்த, அரசு நிர்ண யித்துள்ள இரண்டு ரூபாயை விட, கூடுதலான கட்டணம் வசூலிப்பதை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை, நகரம் முழுவதும் கொசு மருந்து அடித்து, தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகிகள் கண்டன உரை யாற்றினர்.