திருவண்ணாமலை,டிச.29- திருவண்ணாமலை மாவட்டத்தில் விதவைகள், கண வனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண் தையல் தொழிலாளர்க ளுக்கு, மாவட்ட சமூக நலத்துறை யினரால் தையல் இயந்திரம் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் உடனடியாக தையல் இயந்திரம் வழங்க வேண்டும், தையல் மகளிர் திருவண்ணாமலை மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்திலும், வந்தவாசி அன்னை சத்யா மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்திலும் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வழங்கப்பட்ட 200 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தையல் கலை தொழி லாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எ .மேரி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எம். வீரபத்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. பாரி உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.