திருவண்ணாமலை, மே 30- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக் கம் அருகே மண் கடத்தலை உளவு பார்த்து கூறியதாகக் கருதி, ஆடு மேய்க்கும் விவசாயி யின் 18 ஆடுகளை வெட்டி சாய்த்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். திரு வண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கிடாம்பாளையத்தில் உள்ள ஏரியில் மண் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகி றது. இதனால், அந்த பகுதியில் அடிக்கடி வரு வாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு மண் கடத்தும் டிராக்டர், மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆடு மேய்ப்பவர்கள்தான் உளவு பார்த்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என நினைத்து, அப்பகுதியில் ஆடு மேய்க்கும் விவசாயி சம ரசம் (51) என்பவரது ஆட்டுப்பட்டியில் புகுந்த சிலர் 18 ஆடுகளை வெட்டி கொன்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கடலாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.