திருவள்ளூர், ஜூலை 24- திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி கிராமத்தில் பி.ஜி.ஆர் என்ற தனியார் ஆலை உள்ளது. இங்கு அனல் மின் நிலையங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் என கோரி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். பின்னர் தொழி லாளர்கள் தொழிற் சங்கத்தில் இணைந்தனர். இதனால் ஆவேசமடைந்த நிர்வாகம், 13 தொழி லாளர்களை பணி நீக்கம் செய்தது. பணி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழி லாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நிர்வாகம் ஜூலை 13 ஆம் தேதி முதல் கதவடைப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் சென்னை யில் உள்ள தலைமை அலு வலகத்தை முற்றுகையிட்ட னர். அப்போது, ஜூலை 24 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்த னர். ஆனால் காவல்துறை உறுதியளித்தபடி நடந்து கொள்ளாததைத் தொடர்ந்து கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தொழி லாளர்கள் புதனன்று (ஜூலை 24) போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி வட்டாட்சியர் வில்சன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்ப தாக உறுதி அளித்ததை ஏற்று போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், பொருளாளர் என்.நித்தியானந்தம், துணைத் தலைவர் ஆர்.பூபாலன், நிர்வாகிகள் எஸ். எம்.அனீப், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.