நாமக்கல், ஜூன் 29- ராசிபுரம் அருகே கடந்த ஒரு வரு டமாக 100 நாள் வேலை வழங்கப்பட வில்லை என தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே உள்ளது அய்யம்பாளையம் மற்றும் முனியப்பம்பாளையம் கிராமங்கள். இங்கு வசிக்கும் விவ சாய தொழிலாளர்களுக்கு கடந்த ஒரு வருடமாக தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் வேலை கொடுக்க வில்லை. இது குறித்து பலமுறை ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட் சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் பலமுறை மனு கொடுத்து வேலை கேட்டும், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற் பட்ட பெண்கள் இராசிபுரம் - புதுப் பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு ஈடுபட்டனர். அப்போது 100 நாள் வேலை திட்டத்தை உடனடி யாக வழங்க கோரியும், வேறு பணிக்கு செல்பவர்களை இத்திட்டத்தில் பணி புரிந்தது போல் பதிவு செய்தல், பணிக்கான முழு ஊதியத்தையும் வழங்காமல் மோசடி செய்வது, படிப்பறிவு இல்லாதாவர்களை ஏமாற்றி வேலை செய்த நாட்களில் கூலியாகப் பாதி பணத்தை மட்டும் வழங்குவது போன்ற முறைகேடுகள் நடப்பதைக் கண்டித்தும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் முழக்கமிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த இராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயராகவன் தலைமையிலான அதிகாரிகள் பொது மக்களிடம் சமரசம் பேசி கலைந்து போக செய்தார். இதனால் அப்பகுதி யில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.