திருவள்ளூர், ஜூலை 1- சோழவரம் அருகில் உள்ள அலமாதி செமன் ஸ்டேஷனில் ஊதியம் குறைக்கப் பட்டதை எதிர்த்து ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள அலமாதியில் மத்திய அரசுக்கு சொந்தமான செமன் ஸ்டேஷன் (காளை மாடு களில் இருந்து வீரிய விந்து சேகரிக்கும் நிலையம்) உள்ளது. இந்த நிலையம் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு ஒரு டன் எடை கொண்ட 300 வெளி நாட்டு காளை மாடுகள் உள்ளன. இந்த மாடுகள் மூலம் ஆண்டுக்கு 145 லட்சம் யூனிட் விந்துக்கள் சேகரித்து இந்தியா மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கிறது. இந்த மாடுகளை பராமரிக்க 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ள னர். இவர்கள் 2022ம் ஆண்டு வரை நாள் ஒன்றுக்கு ரூ.425 சம்பளத்தில் பணியாற்ற வேண்டும் என ஏற்கனவே ஒப்பந்தம் உள்ளது. இந்நிலையில் ஜூலை 1 முதல் 400 ரூபாய் சம்பளத்தில் பணியாற்ற வேண்டும் என புதிய ஒப்பந்ததாரர் கூறியுள்ளார். இதற்கு எதிப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அதன் தலைவர் ஜி.சம்பத் உள்ளிட்டோர் பேசினர்.