tamilnadu

img

ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்களை கைது செய்து போலீஸ் அராஜகம் சிபிஎம்,வாலிபர் சங்கம் போராட்டம்

பொன்னேரி அக். 15-  மழைநீர் வடிகால் ஓடையை ஆக்கிரமித்து வழிஅமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபர் சங்கத்தலைவர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஆகியோரை  காவல்துறையினர் அராஜகமாக  கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் தடப்பெரும் பாக்கம் ஊராட்சி உள்ளது. பொன்னேரி - திருவொற்றியூர் டி.எச்.சாலையோரம்  மழைநீர் வடிகால் ஓடை  2 கிலோ மீட்டர் தூரம்  வரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை  சிறிய கடைகள் முதல், பெட்ரோல் பங்க்,பஞ்சாபி தாபா வரை  என  ஆக்கிரமித்துள்ளன. மேலும்  பெட்ரோல் பங்க் ஊரக தொழில் துறை  அமைச்சர் பெஞ்ச மின் உறவினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.  பஞ்சாபி தாபா, பெட்ரோல் பங்க்  செல்வ தற்கு  ஓடையை ஆக்கிரமித்து வழிய மைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இதனைக் கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  வியாழ னன்று  (அக்.10) போராட்டம் நடை பெற்றது. பின்னர் பொன்னேரி   கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலை யிட்டு கட்டுமான பணி நிறுத்தப்ப ட்டது. மேலும் எவ்வித பணியும் தொடரக்கூடாது என்றும் எச்ச ரிக்கப்பட்டது.ஆனால், தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக்கிரமிப்பை தடுத்து ஓடை கால்வாய் பாதுகாக்க வலியுறுத்தி  திங்களன்று (அக். 14) மீண்டும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்நிலையில், ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் கட்சியின் பகுதிக் குழு உறுப்பின ரும், வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவருமான டி.மதன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் பாலாஜி ஆகியோரை  செவ்வாயன்று (அக்.15) அதிகாலை 2 மணியளவில் வீடு புகுந்து அராஜகமாக காவல் துறையினர் அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மதனை விடுதலை செய்யக்கோரி யும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கத்தின் சார்பில் அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஒ அலவலகத்தை முற்றுகையிட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில்  கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால்,  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். எம்.அனீப், பகுதிச் செயலாளர் இ.தவமணி,  வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.தேவா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் பொன்ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கோபி நயினார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.