districts

img

சாலைகளை சீரமைக்கக் கோரி வாலிபர் சங்கம் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 21- திருச்சி மாநகராட்சி 40-ஆவது வார்டுக்கு உட்பட்ட பகவதிபுரம் பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணி மாதக்  கணக்கில் மந்தமாக நடைபெற்று வருவ தால் சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்  கற்று உள்ளது. சாலையை உடனே சரி  செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம், அப்பகுதி மக்கள் சார்பில் செவ்வா யன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வாலிபர் சங்க பகவதி புரம் கிளை தலைவர் சாதிக் தலைமை வகித்  தார். மாவட்டத் தலைவர் பா.லெனின், பகுதி  செயலாளர் சந்தோஷ், சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எல்என்டி  நிர்வாகத்தின் மேலாளர் செந்தில் மற்றும்  40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவக் குமார், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் (பொ) கமலவேணி உள்ளிட்டோர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்ப தாகவும் மாற்றுப் பாதையை செப்பனிட்டு தருவதாகவும் பிரதான சாலை பணியை ஒரு வார காலத்திற்குள் முடித்து மக்கள்  பயன்பாட்டிற்கு  தருவதாக உறுதியளித்த னர். இதையடுத்து போராட்டம் தற்காலி கமாக கைவிடப்பட்டது.