districts

img

புலவனாற்றில் புதிய பாலம் கட்டப்படுமா? ஆற்றில் இறங்கி வாலிபர் சங்கம் போராட்டம்

குடவாசல்,  ஜூலை 15 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் சாரநத்தம் ஊராட்சி கிராமம் வேடம்பூர், கொக்கலாடி பகுதியில் அமைந்துள்ள புலவனாற்றில் கடந்த 2020  ஆம் ஆண்டு சார் வாய்க்கால், சட்ரஸ் பாலம்  இடிந்து விழுந்தது. இதனை யடுத்து இரண்டு வருட மாக அவசரத்துக்கு ஆம்பு லன்ஸ்கூட வந்து செல்ல  வழி இன்றியும், பொது மக்கள் மற்றும் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர் களும் ஊரை சுற்றி செல்வ தால் மிகவும் அவதிக்குள்ளா கின்றனர். கடந்த அதிமுக ஆட்சி யில், சிபிஎம் மற்றும் வாலிபர்  சங்கத்தின் சார்பாக போராட் டம் நடைபெற்றபோது, பேச்சுவார்த்தையில் உடனே  பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அப் போது பணியில் இருந்த வட் டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி அளித்தனர். ஆனால் பாலம் கட்டுவதற்கான பணி கள் இதுவரை துவங்கப் படவில்லை.  எனவே அரசின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் புலவனாறு சார் வாய்க்கால் - சட்ரஸ் பாலத்திற்கு புதிய  பாலம் கட்ட உரிய நடவ டிக்கை எடுக்க கோரி இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பாக வலங்கைமான் ஒன்றிய செயலாளர் பி. விஜய் தலைமையில் ஆற்றில் இறங்கி தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ஜெ.ஜெய ராஜ் மற்றும் சங்கத்தின் வேடம்பூர், கொக்கலாடி கிளை உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  வலங்கைமான் வட்டாட்சி யர், காவல் ஆய்வாளர்  மற்றும் வருவாய் அதிகாரி கள் போராட்டக்காரர்களு டன் நடத்திய பேச்சு வார்த்தையில், சம்பந்தப் பட்ட துறை அதிகாரி களோடு பேசி உரிய நடவ டிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இத னையொட்டி போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது.