tamilnadu

img

நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை திருவள்ளூர் ஆட்சியரிடம் மாதர் சங்கம் மனு

திருவள்ளூர், ஜூன் 19-  அனுமதியின்றி, நிலத்தடி நீரை உறுஞ்சும் நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் மாதர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகில் உள்ள நல்லூர் ஊராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்ப ட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் பிரச்சனை உள்ளது. தெரு குழாய்களி லும், வீட்டில் உள்ள இணைப்புகளுக்கும் தண்ணீர் வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிறமப்படுகிறார்கள். சில தனியார் நிறுவனங்கள் தங்கள் லாரியில் தண்ணீரை விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில், நல்லூர் ஊராட்சியில் மட்டும் சுமார் 15 தனியார் நிறுவனங்கள் சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எந்த உரிமமும் பெறாமல், நிலத்தடி நீரை தினந்தோறும் எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரியை சுற்றிலும் சட்ட விரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதை  தடுக்க வேண்டும், அனு மதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனங்களை மூட வேண்டும், மின் இணைப்பை துண்டிக்க வேண்டும், வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும், இதில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லூர் ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய  வேண்டும்  என வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லியி டம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த சந்திப்பின் போது, மாதர் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் சித்ரா, லட்சுமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தானம், கிளைச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.