சேலம், டிச.10- குடியிருப்பு பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தரக்கோரி மாதர் சங்கத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலரி டம் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றி யம், ஆவடத்தூர் கிராமம், மனோன்மணி நகரில் குடிநீர், கழிவுநீர், தெருவிளக்கு பிரச் சனைகளை தீர்க்க வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வட்டார வளர்ச்சி அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர். இம்மனுவினை மாவட்ட துணைத்தலைவர் கே.ராசாத்தி, வட்டார செயலாளர் கவிதா, கிளை தலைவர் மணி மேகலை, கிளைசெயலாளர் கே.மல்லிகா, பொருளாளர் ஆர்.பூர்ணிமா ஆகியோர் அளித்தனர். முன்னதாக, இப்பகுதியில் மாதர் சங்க அமைப்பு தினம் மற்றும் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்று, புதிய கிளையின் நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.