மேட்டூர், செப். 25- பெண் துப்புரவுப் பணி யாளர்களிடம் தவறாக நடந்து கொள்ளும் நகராட்சி துப்புரவு மேற்பார்வையா ளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மேட்டூர் நக ராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், மேட் டூர் நகராட்சியில் துப்புரவுப் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் ஆனந் தன். இவர் துப்புரவு பணியாளர்களை இழி வாகப் பேசுவது, பெண் தொழிலாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது உள் ளிட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இவர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கத் தின் மேட்டூர் கொளத்தூர் செயலாளர் எஸ்.எம்.தேவி தலைமையில் நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவினை மாவட்ட துணைத் தலைவர் கே.ராஜாத்தி, நிர்வாகிகள் சகுந்தலா, லதா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் அளித்தனர்.