திருவள்ளூர் செப்-17 அரசு துறைகளில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராமப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு சனிக்கிழமையன்று (செப்.14) மாவட்டத் தலைவர் (பொறுப்பு) மெல்கிராஜாசிங் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் ஏ.மணிகண்டன் வரவேற்றார். இணைச் செயலாளர் சந்திரமோகன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் கோ.இளங்கோவன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். காந்திமதிநாதன் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் இரா.பாண்டுரங்கன் வரவு- செலவு அறிக்கையையும் முன்மொழிந்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கலைச்செல்வி நிறைவுரையற்றினார். மகளிர் மாநாடு மகளிர் மாநாட்டிற்கு மாவட்ட இணைச் செயலாளர் ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். இதில் மகளிர் துணைக் குழு உறுப்பினர் வெண்ணிலா வரவேற்றார். மகளிர் துணைக் குழு அமைப்பாளர் க.திவ்யா வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக சீ. காந்தி மதிநாதன், செயலாளராக ஏ.மணி கண்டன், பொருளாளராக இரா.பாண்டு ரங்கன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பணப் பயன்களை தடையின்றி வழக்க வேண்டும், மாவட்ட தலைநகருக்கு திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் இருந்து அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.