districts

img

பணியிடங்களில் பாலியல் புகார் குழு அரசு ஊழியர் சங்க மகளிர் மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஆக. 4 - அனைத்து அரசு அலு வலகங்களிலும், பாலியல் புகார் குழுக்களை அமைக்க  வேண்டுமென்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் தென் சென்னை மாவட்ட மகளிர் மாநாடு செவ்வாயன்று (ஆக.2) கிண்டியில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பாலியல் புகார் குழு அமைக்க வேண்டும். அதில்,  முற் போக்கு சிந்தனை கொண்ட வர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். அனைத்து அலுவலகங்க ளிலும் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சி.கலைச்செல்வி தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் என்.ரமேஷ் கொடியேற்றினார். மகளிர் துணைக்குழு உறுப்பி னர் என்.மணிமாலா வரவேற்றார். துணைக்குழு அமைப்பாளர் இ.ரேணு காதேவி அறிக்கையை சமர்ப்பித்தார். இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் ப.க.புகழ்ச்செல்வி, அரசு ஊழியர் சங்கத்தின் மாநில  துணைப்பொதுச் செயலா ளர் தெ.வாசுகி, மாநிலச் செயலாளர் உ.சுமதி உள்  ளிட்டோர் பேசினர். ஏ.விஜய லட்சுமி நன்றி கூறினார்.