tamilnadu

தனியார் தொழிற்சாலையில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

திருவள்ளூர்,அக். 16-  திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த கொள்ளு மேடு பகுதியில் சீன்லாக் பெயிண்ட் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்த தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் எதுவும் முறையாக இல்லா ததால், மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் (28), நாகப்பட்டினத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (29) ஆகிய இரண்டு தொழிலாளர் அக்டோபர் 5 ஆம் தேதி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் விபின் என்ற ஒப்பந்ததாரரின் கீழ் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாய மடைந்த இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த தொழிற்சாலையில் ஆம்புலன்ஸ், மருந்தகம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து பணியாற்ற சட்டப்படியான பதிவோ, அனுமதியோ வாங்கப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் கூறு கிறார்கள். ஏற்கனவே பல முறை தொழிற்சாலையில் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதன் பிறகும் எவ்வித நட வடிக்கையும் தொழிற்சாலை யில் எடுக்காததால் தான் இப்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
சிஐடியு கோரிக்கை
சீன்லாக் பெயிண்ட் தயாரிக்கும்  தொழிற்சாலை யில் உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்க ளுக்கு மருத்துவ செலவை நிர்வாகம் ஏற்க வேண்டும், வேலைக்கு வரும் வரை ஊதியம் வழங்க வேண்டும், நிர்வாகத்தின் இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு மாவட்டத் தலை வர் கே.விஜயன் வலியுறுத்தி யுள்ளார்.