tamilnadu

img

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி

திருவள்ளூர், நவ.26-  தமிழ்நாடு சிலம்பாட்ட சங்கத்துடன் இணைந்து திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில் ஜூனியர் மற்றும் சீனியரு க்கான போட்டி ஞாயிற்று க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்டக்கழகத்தின் தலைவர் கமாண்டோ பாஸ்கர் தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.நேசன் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 11 மற்றும் 14 வயது பிரிவு, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில்  பொன்னேரி, பழவேற்காடு, மாதவரம், செங்குன்றம், வடகரை, ஆரம்பாக்கம், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பள்ளிக ளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், இப்போட்டியில் வெற்றி பெறுவோர் புதுக்கோட்டையில்  டிசம்பர் 27,28,29 ஆகிய தேதிகளில்  மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கின்றனர்.  இப்போட்டிக்கான ஏற்பாடுகளை இச்சங்க த்தின் செயலாளர் முருககனி, பொருளாளர் ராஜா ஆகி யோர் ஏற்பாடு செய்திருந்த னர்.