திருவள்ளூர், மே 28 - எல்ஐசி முகவர்களுக்கும் ஊரடங்குகால நிவாரணம் வழங்கக் கோரி வியாழனன்று (மே 28) பொன்னேரி எல்ஐசி அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய எல்ஐசி முகவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் நாளை கோரிக்கை நாளாக கடைபிடித்து வரு கின்றனர். இதனையொட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தில், முகவர்களுக்கும் ஊரடங்கு கால நிவாரணம் வழங்க வேண்டும், முகவர்க ளின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்திற்கு கிளை தலை வர் கே.ஆர்.கண்ணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். ஏ.கலாம், கோட்ட தலைவர் வி.நாகலிங்கம், மாநில முன்னாள் தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் பேசினர்.