கரூர், ஜூலை 21- தமிழகத்தில் விழுப்புரம், செங்க ல்பட்டு, தஞ்சாவூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கொரோனா வைரஸ் நோய் தாக்க த்தால் உயிரிழந்துள்ளனர். அவர்க ளது குடும்பத்திற்கு தமிழக அரசு உட னடியாக இழப்பீடு தொகை ரூ.50 லட்சம் ஒவ்வொருவருக்கும் வழங்கிட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாது காப்பு வழங்கிட வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரி சோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில், கரூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாக மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணி யாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகி த்தார். கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழி யர் சங்கம் (சிஐடியு) கரூர் மாவட்ட தலை வர் பத்மஸ்ரீ காந்தன், மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி டாஸ்மாக் தொமுச சங்க மாவட்ட செயலா ளர் ராஜேஷ்கண்ணன், டாஸ்மாக் விற்ப னையாளர்கள் பணியாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜா, டாஸ்மாக் எஸ்சி / எஸ்டி சங்க மாவட்ட அமைப்பாளர் வெற்றிவேல், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநி லத் துணைத் தலைவர் உதயகுமார் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். தமிழக அரசு உரிய நடவ டிக்கை எடுக்காவிட்டால், கரூர் மாவட்ட த்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை களையும் அடைத்து, கடையடைப்பு போ ராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
கபசுரக் குடிநீர் வழங்கல்
கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழி யர்கள் சங்கம் (சிஐடியு) சார்பாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் நடைபெற்ற கபசுரக் குடிநீர் மற்றும் ஆர்சனிக் ஆல்பம் 30 ஹோமியோ மாத்திரை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பொதுமக்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கும் விழிப்புணர்வு கூட்டத்திற்கு கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார்.