tamilnadu

களப்பணியாளகளுக்கு  2 மாதங்களாக ஊதியம் நிலுவை உடனடியாக வழங்க சிஐடியு வலியுறுத்தல்

திருவள்ளூர், ஆக. 17 -  கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு களப் பணியில் உள்ள தொழிலா ளர்களுக்கு இரண்டு மாதங்களாக வழங்காமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 65 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற மாவட்ட ஊரக  வாழ்வாதார இயக்கம் மூலம், 650 களப்பணியாளர்கள் தற்காலிக, தொகுப்  பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நாளொன் றுக்கு 575 ரூபாய் கூலி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கள ஆய்வு செய்து  தொற்று பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் களை கண்டறிவது, அவர்களை கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்து வது என பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காமல் உள்ளனர். இது குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் குறிப்பிடு கையில், பேரிடர் மேலாண்மை நிர்வாகம் களப் பணியாளர்களுக்கு ஊதி யம் வழங்க நிதி கொடுத்துவிட்டது. ஆனால், திருவள்ளூர் மாவட்ட நிர்வா கம் 2 மாதங்களாகியும் ஊதியத்தை வழங்காமல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் காலதாமதமின்றி உடனடியாக இரண்டு மாத ஊதி யத்தை வழங்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களும் வழங்க வேண்டும் என்றார்.