districts

img

தொழிலாளர்களிடம் மாநகராட்சி பிடித்தம் செய்த ரூ.2.30 கோடியை வழங்க சிஐடியு வலியுறுத்தல்

கடலூர்,மார்ச் 23- சொசைட்டி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2.30 கோடியை மாநக ராட்சி வழங்க வேண்டும் என சிஐடியு  வலி யுறுத்தி தென்னார்க்காடு மாவட்ட நகராட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் ச.சிவராமன், செய லாளர் த.செல்வராஜ், பொருளாளர் பா.அரச குமரன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர் மாநகராட்சி அலுவலக பணி யாளர்கள் ஒன்றிணைந்து கடலூர் பலதுறை பணியாளர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் 30.6.1995இல் துவங்கப்பட்டு 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது 279 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கம் தூய்மை பணியாளர்களை பொருளாதார சிக்கலில் இருந்து ஓரளவு காப்பாற்றி வருகிறது. கடலூர் மாநகராட்சியும் தனது பணி யாளர்களுக்கு சொசைட்டி பலன்கள் கிடைக்க அனைத்து உதவிகளும் செய்து கொண்டு வந்த நிலையில் சொசைட்டிக்காக பிடிக்கப்பட்ட 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மாநகராட்சியில் தேங்கிவிட்டது. இந்த தொகை மாநகராட்சியால் கட்டப் படாததால் சொசைட்டி உறுப்பினர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இத னால் பணியாளர்கள் அபராத வட்டியாக மாதம் ரூ 60,000 கட்டி வருகின்றனர். அபராத வட்டி கந்து வட்டி போல் பிடிக்கப் படும் நிலை உள்ளது. பணி ஓய்வு பெற்ற வர்கள் 40 பேருக்கு ரூ. 50 லட்சம் ரூபாய் திருப்பித் தர வேண்டியுள்ளது. எனவே மாநகராட்சி வழங்க வேண்டிய 2 கோடி 30 லட்சத்தை கட்டி உதவினால் தொழி லாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகை கள் கிடைக்கும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.